ஒருசமயம் இந்திரன் இத்தலத்திற்கு வந்து மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு, அதை எடுக்க முயன்றபோது, எடுக்க வராமல் இந்திரனின் கை சின்னம் அதில் பதிந்த காரணத்தால் 'கைச்சின்னம்' என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் மருவி 'கைச்சினம்' என்று ஆனது.
மூலவர் 'கைச்சினநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'வெள்வளைநாயகி', 'வாளையங்கண்ணி' என்னும் திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், ஸ்ரீநிவாசப் பெருமாள், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், ஆறுமுகப் பெருமான், மகாலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர், சூரியன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
திருமணபிந்து முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|